கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதல் சமபவத்திற்கு பிறகு, சீன இராணுவம் அனைத்திற்கும் தயாராக உள்ளது என நிரூபிப்பதிற்கு சீன பத்திரிக்கையான க்ளோபல் டைம்ஸ் (Global Times) முயற்சி செய்து வருகிறது. சிறிது நாட்களுக்கு முன், சீன இராணுவத்தின், திறனை எடுத்து காட்டும் வீடியோவை பகிர்ந்து கொண்டது. இதனால், அது மூக்குடைபட்டது தான் மிச்சம். இதற்கு பதிலடியாக, Indo-Tibetan Border Police (ITBP) ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்தது. இதை பார்த்த சீனர்கள், நிச்சயம் இந்தியாவின் வலிமையை உணர்ந்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மிகவும் வைரலாகியது.

சீன பத்திரிக்கை போஸ்ட் செய்த வீடியோவில், சீன படையினர், கண்களை கட்டிக் கொண்டு, 99 விநாடிகளில் ரைஃபில் மற்றும் பிஸ்டலை அசம்பிள் செய்தனர்.
இதற்கு பதிலடியாக, ITBP வெளியிட்ட வீடியோவில், இந்திய வீரர்கள் வெறும் 26 விநாடிகளில், முதலில் ரைஃபிள்களை டீ-அசம்பிள் செய்து விட்டு பின்னர் அசம்பிள் செய்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதை அனைத்தையும் அவர்கள் ஒரே கைகளால் செய்கின்றனர்.
சிறிது நாட்களுக்கு முன்னால், இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் சீன தரப்பிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. ஆனால், சீனா உண்மையான இறப்பு எண்ணிக்கையை தற்போது வரை வெளியிடவில்லை. இது தொடர்பாக, மழுப்பலாக கூறியுள்ள சீனா, இந்தியாவுடனான பிரச்சனையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும், அதனால் தான் எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றும் கூறி வருகிறது