காணாமல் போன பெண்ணை தேடிச்சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

இந்தோனேஷியா பகுதியில் பல்வேறு வகை மலை பாம்பு இனங்கள் வசித்து வருகின்ற நிலையில், இந்த மலைப்பாம்புகள் அவற்றின் பாதைகளில் சுற்றி திரியும் பகுதிகளில் குழந்தைகள், விலங்குகள் மற்றும் நபர்கள் இருந்தாலும் அப்படியே அவர்களை விழுங்கி விடும் அளவிற்கு ஆபத்தானவை.

இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு வருத்தமடைய வைக்கும் நிகழ்ச்சியாக, ஜாம்பி என்ற பகுதியில் ஜஹரா எனும் தோட்ட வேலை செய்யும் பெண்மணி வசித்து வந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் தோட்ட வேலைக்கு சென்றிருக்கிறார்.

வயலுக்கு சென்ற அந்தப் பெண் வீடு திரும்பவில்லை. அவருக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கே ஒரு மலைப்பாம்பு அசைய முடியாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒருவேளை இந்த மலைப்பாம்பு பெண்ணை விழுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.

எனவே, சந்தேகத்தின் பேரில் பாம்பை கத்தியால் குத்தி கிழித்த போது, அனைவரும் கவலை அடையும் விதமாக, பெண்ணின் சடலம் அதனுள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Baskar

Next Post

’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! - ஐகோர்ட்

Fri Oct 28 , 2022
பெண்கள் தங்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை என்பதை திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபா கன்கன்வாடி மற்றும் ராஜேஷ் எஸ்.படீல் ஆகியோர் அமர்வில் வந்த வழக்கொன்றில், பெண்ணொருவர் தன் கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தன்னை மிகமோசமாக துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண், தனக்கு திருமணமான ஒரு மாதத்துக்கு பின்னிருந்து கணவர் குடும்பத்தார் கார் வாங்க […]
’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

You May Like