தகாத உறவால் வந்த வினை.! தலையில் கல்லைப் போட்டு கொல்லப்பட்ட இளைஞர்.! பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு.!

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் பாதி எரிந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் .

அங்கு சென்ற காவல் துறையினர், இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் அடையாளம் காண்பதிலும் சிக்கல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட நபர் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த விஜய பசவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

#BREAKING | ”தமிழக வெற்றி கழகம்”..!! விஜய்யின் கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Fri Feb 2 , 2024
நடிகர் விஜய்யின் கட்சியின் பெயர் ”தமிழக வெற்றி கழகம்” என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஒரு செயலி நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என […]

You May Like