’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகையை 60% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது. இந்நிலையில் விப்ரோ, கடந்த காலாண்டில் வெளியிட்ட அறிவிப்பைப் போலவே இன்ஃபோசிஸ் தற்போது அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒருபக்கம் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு முன்லைட்டிங் செய்ய அனுமதி அளிப்பது முதல் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை தொடர்வது வரையில் பலவற்றை அறிவித்துவிட்டு, ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் தொகையைக் கைப்பற்றியுள்ளது.

’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

நவம்பர் 3ஆம் தேதி வெளியான தகவல் படி, இன்ஃபோசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் பே தொகையில் 60 சதவீதம் மட்டுமே அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேரியபிள் பே என்பது ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள தரவுகள் படி J4, J5, J6 பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்கள் அனைவருக்கும் 60 சதவீதம் வரையிலான வேரியபிள் பே மட்டுமே அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

இன்ஃபோசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ரூ.36,538 கோடி அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் லாப அளவில் 11 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து சுமார் ரூ.6,021 கோடியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களுக்கு இந்த ரெசிஷன் அச்சம் நிறைந்த காலகட்டத்தில் மார்ஜின் அளவை காப்பாற்றுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதோடு ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிகப் பணத்தை முதலீடு செய்து புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

செப்டம்பர் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவீதத்தில் இருந்து 27.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதன் சக போட்டி நிறுவனங்களான விப்ரோ 23 சதவீதமாகவும், HCL 23.8 சதவீதமாகவும், TCS 21.5 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் 5-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா-வின் ஊழியர்களின் வெளியேற்ற விகிதம் 20% ஆக குறைந்துள்ளது. ஜூன் காலாண்டில் இதன் அளவு 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனத்தில் டெக் மஹிந்திரா தான் குறைவான அட்ரிஷன் விகிதத்தைக் கொண்டு உள்ளது.

’சம்பளத்தில் கை வைத்த இன்ஃபோசிஸ்’..!! திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!! யாருக்கெல்லாம் பாதிப்பு..?

வேரியபிள் பே தொகையில் 60 சதவீதம் குறைப்பு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இல்லை. இன்போசிஸ் BPM பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் BPM பிரிவில் மட்டும் உலகளவில் 50,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் பெரும் பகுதி வெளிநாட்டில் உள்ளனர். ஜூன் காலாண்டில் இன்ஃபோசிஸ் அனைத்து ஊழியர்களுக்கும் 70 சதவீதம் மட்டுமே வேரியபிள் பே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் அப்படி இருந்ததுக்கு காரணம் இதான் - அசல் கோளாறு விளக்கம்.!

Thu Nov 3 , 2022
விஜய் டிவியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிற நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்து வரும் நிலையில், தற்போது சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிற நிலையில், அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றார். தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியில் இளம் பாடகரான இவர் மீது நல்ல எண்ணம் இருந்த நிலையில், நாள்போக்கில் […]
BB Tamil..!! ’நான் அப்படி பண்ணிருந்தா சும்மா விடமாட்டாங்க’..!! ’என் கேரக்டரே அதான்’..!! - அசல் கோலார்

You May Like