கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

பழைமையை பறைசாற்றும் கல்வெட்டுகள்..! தொட்ட இடமெல்லாம் தொல்லியல் சான்றுகள்..!

பாண்டியர், நாயக்கர்கள் கால வரலாறு கூறும் ஆதாரங்கள் நிறைந்த தொட்டணம்பட்டியில் தொல்லியல்துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திண்டுக்கல்லில் இருந்து 17 கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது தொட்டணம்பட்டி. இங்கு தாழம்பூ அதிகமாக இருந்த பகுதி என்பதால் “தாழவனம்” என்ற பெயர் இருந்தது. தற்போது தொட்டணம்பட்டி என்றாகி விட்டது.

பழைமையை பறைசாற்றும் கல்வெட்டுகள்..! தொட்ட இடமெல்லாம் தொல்லியல் சான்றுகள்..!

மன்னர்கள் காலத்தில் திண்டுக்கல் போர்களமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்த நல்லமானார்கோட்டை அருகே தொட்டணம்பட்டி கிராமத்தில் மீண்டும் பழைமையை பறைசாற்றும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

தேவதான கல்வெட்டு

இங்குள்ள வயல்வெளியில் உள்ள ஒரு கல்வெட்டு, அக்காலத்தில் தேவரடியாருக்கு வழங்கப்பட்டதற்கான நிலத்தை குறிக்கிறது. அழகிய சேவடியாள் எனும் வார்த்தை, திருவிழா காலங்களில் நடனத்தில் ஈடுபடும் பெண்களை குறிக்கும். அவர்களை தேவரடியார் எனவும் அழைப்பர். இந்த கல்வெட்டு முழுவதுமே மெய்யெழுத்தின்றி உள்ளது. 1750க்கு பின் வீரமாமுனிவர் வந்த பின் எழுத்தின் மீது புள்ளி வைக்கும் பழக்கம் உருவானது. எனவே, கி.பி. 1500-1600 காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தூம்பிகள்

இங்குள்ள பரந்த குளம் மற்றும் பாசன பகுதி, வல்லகொண்டான் நாயக்கர் சமுத்திரம் எனப்படுகிறது. அக்காலத்தில் குளங்களில் தூம்பிகள் வைத்து நீரின் அளவை தெரிந்து கொள்வர். இக்குளத்தில் இரண்டு ஜோடி தூம்பிகள் உள்ளன. ஒன்று பாண்டியர் காலத்தையும், மற்றொன்று நாயக்கர் காலத்தை குறிக்கிறது. 800 வருடங்களுக்கு முன்பு பாண்டியர்கள் குளக்கரையின் மீது கன்னிமார்கள் சிலை வடித்துள்ளனர். கன்னிமார்களில் வராகி, பிராமி (அபிராமி), மகேஸ்வரி ஆகியோர் சிலைகள் மட்டுமே உள்ளன. அதற்கு பின்பு வந்த நாயக்கர்களும் புதிதாக கன்னிமார் சிலை வடித்துள்ளனர். இவை 1372இல் வந்த குமார கம்பளநாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.

மீன் சின்னம் பொறித்த கோயில்

பாண்டியர்கள் காலத்தை உறுதி செய்யும் விதமாக இங்குள்ள சிவன் கோயிலில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. அதோடு கோயிலின் உள்ளே லிங்கத்தின் பாதியளவு ஆவுடை (பீடம் போன்ற பகுதி) மட்டுமே உள்ளது. லிங்கத்தை காணவில்லை. அதற்கு பின்பு வந்தோர் தற்போது ஆவுடை மீது விநாயகர் வைத்து வழிபடுவதோடு கோயில் பூச்சு வேலைகளையும் செய்துள்ளனர்.

தொட்டணம்பட்டியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மாலைக்கோயில் என்ற இடம் உள்ளது. இங்கு வீரக்கல் எனும் பெரிய கற்சிற்பம் 10 அடி உயரத்தில் உள்ளது. கி.பி. 1500 காலகட்டங்களில் வாழ்ந்த நாயக்கர் ஒருவர் தங்கள் ஆட்சிப் பகுதிகளை பாளையபட்டுகளாக பிரித்து பல்வேறு குறுநில நாயக்க மன்னர்களிடம் வழங்கி விடுவார். இவர்கள் ஆட்சி செய்த காலங்களில் செய்த சாதனைகள், வழிபாடுகள், பெருமைகள் போன்றவற்றை கல்வெட்டுகளாக பொறித்து வைத்துள்ளனர். இங்குள்ள மக்கள் இன்றும் இந்த 10 அடி கல்வெட்டை கடவுளாக வழிபடுகின்றனர்.

இதற்கு அருகே உள்ள நல்லமனார்கோட்டையில் பாண்டியர்கள் கால போர்க்களமாகவும், ஆயுதம் தயாரிக்கப்படுத்தப்பட்ட இடமாகவும் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. அதற்கு அருகிலேயே கோயில், குளம், பாசன பகுதி, தூம்பிகள், வீரக்கல் போன்றவை பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் கால கிராமங்களை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

இந்தப் பகுதிகளை எல்லாம் தொல்லியல் துறை ஆய்வு செய்தால் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

1newsnationuser4

Next Post

'இந்திய இன மக்கள் தான் அதிக அளவு இறப்பு அபாயத்தை கொண்டுள்ளனர்' ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Sat Oct 17 , 2020
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள இந்திய இன சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் வெள்ளை ஆண்கள் மற்றும் பெண்களை விட COVID-19 பாதிப்பில் இறப்பதற்கு ஏறக்குறைய 50-75 சதவீதம் அதிகம் வாய்ப்புள்ளது என்று லண்டனில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாக இதேபோன்ற இன வேறுபாட்டை முடிவுக்கு கொண்டுவந்த தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்), இந்த வாரம் அதன் […]
லாக் டவுன் தளர்வுகளுடன் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு...அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

You May Like