இன்ஸ்டா மூலம்.. ஆசையை தூண்டி.. நடுராத்திரியில் இளம்பெண் செய்த செயல்.! அதிகாலையில் கதறிய தொழிலதிபர்.!

தற்காலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை தாண்டி இன்று இன்ஸ்டாகிராம் தான் அதிகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதன்விளைவாக ஒரு அதிர்ச்சி சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, கன்னியாகுமரியில் அறையெடுத்துத் தங்கி இளம் பெண் ஒருவர் 9 பவுன் மதிப்புள்ள நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரான இவர் கார்களை வாங்கி விற்று வருகின்றார். இந்நிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஒரு பெண்ணோடு புதிதாக அறிமுகம் கிடைத்துள்ளது. அப்பெண் மதுரை என்றும் தன்னுடைய பெயர் சத்யா(29) என்றும், தொழிலதிபர் ஆல்பர்ட்டிடம் பழக்கமானார். அதனை தொடர்ந்து இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இன்ஸ்டாகிராம் செயலியில் தினமும் பேசிக்கொண்டு வந்துள்ளார்கள்.

ஆல்பர்ட் தான் கன்னியாகுமரிக்கு செல்ல இருப்பதாகவும் , விரும்பினால் நீயும் வரலாம் என சத்யாவையும் அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவும் மற்றும் ஆல்பர்ட் இருவரும் கன்னியாகுமரி சென்ற நிலையில், அங்கே ஒரு விடுதியில் அறை எடுத்துத்தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று முழுவதும் சென்ற இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இரவில் இருவரும் சேர்ந்தே தங்கிய நிலையில் இன்று காலை ஆல்பர்ட் எழுந்ததும், சத்யா அவரின் அருகில் இல்லை. இதனை முதலில் சாதாரணமாக வெளியே தான் சென்றிருப்பார் எனத் தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த ஒரு பவுன் அளவிலான இரு தங்க மோதிரம் மற்றும் கழுத்தில் போடக்கூடிய 7 பவுன் தங்கச் சங்கிலி ஆகியன மாயமாகியிருந்தன.

இதனையடுத்து விடுதி உரிமையாளரிடம் ஆல்பர்ட் முறையிட, அவர்களின் மூலம் தகவலறிந்த கன்னியாகுமரி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

கேரளாவில் தீவிரமாக பரவும் பன்றிக் காய்ச்சல்..!! மனிதர்களையும் தாக்குகிறதா..? அதிர்ச்சி தகவல்..!!

Sun Oct 30 , 2022
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கேரளாவின் சில பகுதிகளில் பன்றி இறைச்சி விற்கும் இறைச்சிக் கடைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி கே ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பண்ணையில் உள்ள பன்றிகளை கொலை செய்து புதைக்க […]
கேரளாவில் தீவிரமாக பரவும் பன்றிக் காய்ச்சல்..!! மனிதர்களையும் தாக்குகிறதா..? அதிர்ச்சி தகவல்..!!

You May Like