உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா

தமிழக பாஜக தலைவர்கள் குறித்த உளவுத்துறையின் அறிக்கை.. ஷாக்கான அமித்ஷா.. அதிருப்தியில் மூத்த தலைவர்கள்..

தமிழக பாஜக தலைவர்கள் குறித்து உளவுத்துறை கொடுத்த அறிக்கையால், ஷாக்கான அமித்ஷா தமிழக தலைவர்களை எச்சரித்துள்ளாராம். இதனால் மூத்த தலைவர்களை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

tn amitshah

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற பிறகு, தமிழக பாஜக தலைவர் பதவி காலியானது. அதன்பிறகு தலைவர் பதவியை நியமிப்பதில் குழப்பம் நீடித்து வந்ததால், கடந்த 6 மாதமாக அந்தப் பதவி நிரப்படாமலே இருந்தது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரின் பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இதனிடையே ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், கே.டி. ராகவன், ஏ.பி முருகானந்தம் இவர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக கூடும் என்று தகவல் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல். முருகன் என்பவரை டெல்லி தலைமை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.

tn bjp leaders

ஆனால் தமிழக பாஜக புதிய தலைவரை நியமிப்பது குறித்து முன்னாள் பாஜக தலைவர் அமித்ஷாவும், தற்போதைய தலைவர் ஜே.பி நட்டாவும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார்கள். மேலும் தமிழக பாஜக தலைவர்களின் பட்டியலையும், அவர்களின் முழு விவரத்தையும் அறிக்கையாக அளிக்க மத்திய உளவுத்துறைக்கு அமித்ஷா உத்தரவிட்டார். ஆனால் உளவுத்துறை சமர்பித்த அறிக்கையில், ஒருவர் மீது நேர்மறையான அம்சங்கள் இடம்பெறவில்லையாம். மேலும் ஒவ்வொருவரின் மீதும் பல புகார்களும் அறிக்கையில் இடம்பெற்றிருந்ததாம். இதனால் தமிழக பாஜக தலைவர்கள் மீதிருந்த நம்பிக்கையே கேள்விக்குறியாகி விட்டது.

இதுஒருபுறமிருந்தாலும், தமிழக தலைவர்கள் பலரும், தலைவர் பதவியை பெற, தங்களுக்கு தெரிந்த வட்டாரங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த தகவலை அறிந்த அமித்ஷா, இனி தமிழகத்தில் இருந்து பதவிக் கேட்டு யாரும் டெல்லிக்கு வரக்கூடாது எச்சரிக்கை விடுத்தார். எனினும் தமிழக பாஜகவுக்கு பல மாதங்களாக தலைவர் நியமிக்கப்படாததால், கட்சிப் பணிகள் முடங்கி கிடந்ததும் பாஜகவின் டெல்லி தலைமைக்கு பெரிய தலைவலியாக மாறியது.

இந்த நிலையில் எல். முருகன் என்பவரை டெல்லி தலைமை தமிழக பாஜக தலைவராக நியமித்தது. நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான கும்பல் தாக்குதலால், பாஜக அந்த சமூகத்தின் எதிரி என்ற தோற்றம் உருவாகியிருக்கிறது. அந்த தோற்றத்தை மாற்றவே முருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைமைக் கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மக்களிடம் பெரிதும் அறிமுகமில்லாத முருகனை பாஜக தலைமை நியமித்ததில், தமிழக மூத்த தலைவர்கள் சிலர் வருத்தத்தில் உள்ளனராம்.

l murugan tn bjp n

மேலும் தங்களை பற்றி சிந்திக்காத கட்சியைப் பற்றி, தாங்கள் எப்படி சிந்திக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் மூத்த தலைவர்கள். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு கொள்கையை முன்னிறுத்தி விட்டு, தமிழகத்தில் மட்டும் ஊழல் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ரசிக்கவில்லை. எனவே பாஜக மீது மக்களுக்கு உள்ள கோபமும் அதிகமாகி உள்ளது. இந்த சூழலில் கட்சியை எப்படி வளர்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

முருகனின் நியமனம் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எப்படி அவரின் தலைமையின் கீழ் கட்சி ஒற்றுமையாக செயல்படும் என்பதும் மிகப்பெரிய கேள்வி.. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்த சவாலான நேரத்தில், முருகனின் செயல்பாடுகள் பாஜகவிற்கு எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க தான் வேண்டும்..

1newsnationuser1

Next Post

கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியா.. கர்நாடகாவில் மேலும் ஒரு பெண்ணுக்கு வைரஸ் இருப்பது உறுதி.. இதுவரை 110 பேர் பாதிப்பு..

Mon Mar 16 , 2020
கர்நாடாவில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உறவினர் பெண் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். இது நாட்டின் கொரோனா முதல் உயிரிழப்பாக கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த முதியவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மூவருக்கு பாதிப்பு இல்லை என்று உறுதியான நிலையில், […]
கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

You May Like