இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர்.. உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காரணமா..?

அம்மா உணவகங்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு நடத்தியதற்கு உளவுத்துறை வழங்கிய அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Amma-Unavagam-cm

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறதே குறைந்தபாடில்லை.

கொரொனா நிவாரணம், சிறப்பு சலுகைகள் என முதலமைச்சர் எடப்பாடி பல்வேறு சிறப்பு அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். நேற்று கூட அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால் முதல்வரின் இந்த திடீர் ஆய்வுக்கு உளவுத்துறை வழங்கிய அறிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறித்து முதல்வருக்கு உளவுத்துறை அண்மையில் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. ஊரடங்கு காரணமாக வேலையிழந்த ஏழைகளும், வீடற்ற தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் வேலை, பணம் இல்லாமல், தினசரி உணவுக்கே கஷ்டப்படும் சூழல் உருவாகி உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனாவை விட பட்டினியால் உயிர் போனால் அது அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.

chennai lockdown

இந்த அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த முதல்வர் பழனிசாமி, இதுகுறித்து எஸ்.பி வேலுமணியிடம் ஆலோசித்தாராம். அந்த ஆலோசனையில், பட்டினிச்சாவு ஏற்படும் சூழல் தமிழகத்தில் வரக்கூடாது என்பதால் அம்மா உணவகங்களை 24 மணி நேரமும் இயக்கலாம் என்ற யோசனையை அமைச்சர் வேலுமணி வழங்கியுள்ளார். உடனே அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி முதல்வரும் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர், அம்மா உணவகங்களை 24 மணி நேரம் இயக்கவும், பணியாளர் 3 ஷிட்டுகளில் பணிக்கு வர வேண்டும், அவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், உணவருந்த வரும் மக்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு உணவருந்த வேண்டும் எனப் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் அம்மா உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

cm_amma

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வரை தினசரி சென்னையில் சுமார் 3 லட்சம் பேர் உணவருந்தி வந்தனர். ஆனால் தற்போது அம்மா உணவகங்களில் உணவருந்தும் நபர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 28-ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஒரு நாளைக்கு சுமார் 14 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்.

எது எப்படியோ, கொரோனா கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில் அம்மா உணவகம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு உணவு கிடைப்பது பாராட்டுக்குரியது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி.. மொத்தம் 411 பேருக்கு கொரோனா பாதிப்பு..

Fri Apr 3 , 2020
இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால், மொத்தம் 411 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு வைரஸ் […]
corona ward

You May Like