அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்..

வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பயிக் கடன், ட்ராக்டர் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வட்டிக்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கியதால், பலர் வேலை, வருமானம் இன்றி தவித்த நிலையில், இந்த காலக் கட்டத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து இஎம்ஐ செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி 6 மாதம் கால அவகாசம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவணைக் காலத்திற்குக் வட்டிக்கு வட்டி விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, கடன் பெற்றவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனிடையே நவம்பர் 2-ம் தேதிக்குள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்தது.

supreme court judge increase SECVPF

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ 2 கோடி வரையிலான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டது. அவ்வாறு கூட்டு வட்டியுடன் தவணையைச் செலுத்தியவர்களுக்கு நிலையான வட்டிபோக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த சலுகை வீட்டுக் கடன், தனிநபர் கடன், சிறுகுறு தொழில், கல்வி, வாகன கடன், நுகர்வோர் கடன் ஆகிய கடன்களுக்கு வட்டிக்கு கூடுதல் வட்டி இல்லை. ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து தேசிய வங்கிகளிலும் கடன் பெற்ற பயனாளிகளுக்கு வட்டி சலுகை வழங்கப்படுகிறது.

வீட்டுக்கடன்

எனினும் இந்த வட்டிக்கு வட்டி சலுகை பயிக் கடன், ட்ராக்டர் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ பிப்ரவரி 29-ம் தேதி கணக்கின்படி, கிரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கியவர்கள், மாதத் தவணை செலுத்துவோர் தவணையுடன் கூட்டு வட்டி செலுத்தி இருந்தால், அவர்களுக்கான நிலையான வட்டி மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித்தொகை வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்.

எனினும் கொரோனா காலத்தில் வேளாண் கடன் திட்டத்தின் கீழ் பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்தும்போது வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படாது. இந்த வேளாண் கடன் பெற்றவர்கள் மத்திய அரசின் வட்டிச்சலுகை திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..!

Fri Oct 30 , 2020
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு பெண் தனது கணவனால் 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டு 21 நாட்களுக்கு நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் லாகூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடக்கு சர்கோதாவில் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவரே வெறும் ரூ.5000 பணத்திற்கு அந்த பெண்ணை சில நபர்களிடம் விற்றுள்ளார். அந்த நான்கு நபர்களும் அந்த பெண்ணை தங்கள் இடத்திற்கு அழைத்துச் சென்று 21 நாட்கள் கூட்டு […]
WhatsApp Image 2020 10 30 at 12.45.20 PM

You May Like