வெளியான சுவாரசியமான தகவல்..!! கூகுள் CEO சுந்தர் பிச்சை தினமும் காலையில் தவறாமல் செய்யும் விஷயம்.!

ஒவ்வொருவரும் தங்களது காலை பொழுதை உடற்பயிற்சி மற்றும் பத்திரிகை வாசிப்பு போன்றவற்றை செய்வதன் மூலம் தொடங்குவோம். ஆனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தனது நாளை தகவல் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை படிப்பதன் மூலம் தொடங்குவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘Techmeme’ என்ற தொழில்நுட்ப இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் தனது காலை பொழுதை துவக்குவதாக தெரிவித்துள்ளார்.

‘Techmeme’ என்ற இந்த இணையதளம் 2005 ஆம் ஆண்டு கேப் ரிவேரா என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து தொழில்நுட்ப செய்திகளை ஒன்று திரட்டி தனது வாசகர்களுக்கு கொடுக்கிறது. இந்த நிறுவனம் கிளிக் மற்றும் விளம்பரங்களின் தொந்தரவு இல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய சுருக்கமான செய்திகளை நிர்வாகிகளுக்கு வழங்குகிறது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நேர்காணலில் காலையில் பின்பற்றும் விளக்கங்கள் பற்றி விரிவாக பேசியிருந்தார் சுந்தர் பிச்சை. அப்போது காலை எழுந்ததும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளின் ஆன்லைன் பிரதிகளை வாசித்த பின்னர் தேநீருடன் பிரட் டோஸ்ட் மற்றும் ஆம்லெட் காலை உணவாக சாப்பிடுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்த தகவல்களுடன் கூகுள் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமான கூகுள் பார்ட், ஜெமினி என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கி இருக்கிறார் சுந்தர் பிச்சை. பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட AI மாடல்களை உருவாக்குவதற்கான கூகுளின் அணுகுமுறையை ஜெமினி சாட் பாட் பிரதிநிதி பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்த புதிய திட்டத்துடன் கூகுள் பார்ட் சீரமைக்கப்பட்டதால் அது ஜெமினி என பெயரிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Next Post

அதிர்ச்சி..!! தங்க சுரங்கங்களில் நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 68ஆக உயர்வு..!! மேலும் உயரும் அபாயம்..!!

Tue Feb 13 , 2024
பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ டி ஒரோ மாகாணத்தின் மசாரா மற்றும் மின்டானாவ் தீவின் மாக்கோ ஆகிய நகரங்களுக்கு இடையே ஏராளமான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், மண் சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிக்காக 100-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் அங்கு குவிக்கப்படுள்ளனர். கனரக மண் அள்ளும் […]

You May Like