காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

கடலுக்கடியில் மூழ்கிப் போன 20,000 ஆண்டு கால தமிழர் வரலாறு..!! குமரிக்கண்டம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்..

குமரிக் கண்டம்.. நாம் இந்த வார்த்தையை வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் கேட்டிருப்போம்.. இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும்.. ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்.. இதுகுறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்..


இதற்கு முன்பு நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக் கண்டமும் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலத்தீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்ததே குமரிக் கண்டம் என்று அறிவியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இதன் கடல்வழிப்பாதை ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

குமரிக்கண்டம்

ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. இது ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்..

இந்த நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே ஒரு மாபெரும் நிலப்பகுதியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

kumari kandam

பாண்டிய நாட்டில் கூறப்படும் புராணக் கதைகள் குமரிக்கண்டம் இருந்ததற்கு மேலும் வலு சேர்க்கிறது. குமரிக்கண்டம் பாண்டிய மன்னர்களினால் ஆளப்பட்டது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் மூதாதையர் வாழ்ந்ததும், நம் தாய்த் தமிழ் பிறந்ததும் இங்கே தான். இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்.

kumari kanda depth

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் 49 நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான 3 நகரங்கள் இருந்தன.

மேலும் குமரிக்கண்டதை ஆண்ட பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

kumari kandam nn

தொடர் இயற்கை பேரழிவுகள் காரணமாக குமரிக் கண்டம் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது என்றும் கூறுகின்றனர். சுமார் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இப்போது இருப்பதை விட 100 மீட்டர் குறைவாக இருந்தது என்று இந்தியாவின் தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும் கடல் மட்டத்தின் உயர்வும், குமரிக்கண்டம் கடலில் மூழ்கியதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

பேரழிவுகளுக்கு பின் அங்கு வாழ்ந்த மனிதர்கள் மூன்று திசைகளிலும் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் 1960 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

8 1578301472

அதுமட்டுமின்றி, தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் குமரிக்கண்டம் இருந்தது என்பதை உறுதியாக கூற முடியவில்லை.

எனவே குமரிக் கண்டம் என்பதே வெறும் கற்பனை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மேலும் குமரிக்கண்டம் குறித்த ஆராய்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை முழுமையாக ஆய்வு செய்தால் குமரிக்கண்டம் குறித்தும், தமிழரின் வரலாறு குறித்தும் பல பிரம்மிப்பூட்டும் தகவல்கள் வெளியாகலாம்..

1newsnationuser1

Next Post

கரண்ட் பில் ஷாக் அடிக்கிறதா..? இதோ உங்களுக்காக கரண்ட் பில்லை கம்மியாக்க சில டிப்ஸ்..!

Sat Aug 15 , 2020
தற்போதைய சூழலில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை. வீட்டில் பல பொருட்கள் கூட மின்சாரத்தில் தான் இயங்குகிறது. ஒருவேளை கரண்ட் போனாலும் இன்வெர்டர் இருக்கிறது. ஒரு புறம் டீவி ஓட அனைத்து ரூம்களிலும் பேன், லைட் ஆனில் இருக்க மொபைல், லேப்டாப் சார்ஜ் ஏற இப்படி லாக்டவுன் நேரங்களில் வாழ்ந்து வருகிறோம். என்னதான் 100 யூனிட் கரண்ட் இலவசம் என்றாலும் நமக்கு அதை தாண்டி தான் மின்சாரம் செலவாகிறது. இதனை […]
64953953

You May Like