குரூப் 2 பதவிக்கு வரும் 12ம் தேதி முதல் நேர்முக தேர்வு!… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

குரூப் 2 பதவிக்கு வரும் 12ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், குரூப் 2 பதவியில் அடங்கிய பதவிகளுக்கு கடந்த 25.3.2023 அன்று முதன்மை எழுத்து தேர்வு நடைபெற்றது. முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தெரிவிற்கான வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் மற்றும் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறும். இதே போல தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில் அடங்கிய மருத்துவ சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான தேர்வு 5.12.23 அன்று நடைபெற்றது. இதில் 126 பேரின் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

எதுக்கு இந்த அவசரம்!… என்ன திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்கள்?… அடிப்படை அறிவு இல்லாத திமுக அரசு!… அண்ணாமலை விளாசல்!

Sat Feb 3 , 2024
குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, அவசரகதியிலான செயல்பாட்டில் ஈடுபட மாட்டார்கள் என்று கோயம்பேடு இடமாற்றம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும்போது, குறைந்தபட்ச நேர்மையும், அடிப்படை அறிவும் இருப்பவர்கள் யாரும், திமுக அரசைப் போல, […]

You May Like