வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை படிக்கும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை படிக்கும் வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஆடியோ மெசேஜ்களை டெக்ஸ்டாக படிக்க இந்த அம்சம் பயன்படுத்தப்படும். மேலும், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.24.7.7 மூலம் சோதனை அடிப்படையில் இந்த வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் டிரான்ஸ்கிரிப்ஷனை அன்லாக் செய்ய கூடுதலாக 150 எம்.பி டேட்டா செலவிட வேண்டும். டிரான்ஸ்கிரிப்ஷன் டவுன்லோடு செய்யப்பட்டதும், ஆடியோவை கேட்டாகமலே டெக்ஸ்ட் (Text) மூலம் தகவலை தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் உங்கள் போனில் உள்ள Speech recognition பயன்படுத்தி என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்கிரிப்ட்களை வழங்குகிறது. அதோடு பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் உங்கள் மொபைலிலேயே செய்யப்படும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

IPL பார்க்க செல்பவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமா..? தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!

Sat Mar 23 , 2024
ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற செய்தி தவறாகத் திரிக்கப்பட்டிருப்பதாகவும் இது அரசின் செலவல்ல என்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளைக் காண வருபவர்கள், தங்களது இணைய டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்தாக நேற்று செய்திகள் வெளிவந்தன. மேலும், போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், […]

You May Like