"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

“இந்துத் தீவிரவாதிகளை எதிர்கொண்டு, முஸ்லீம்களின் படுகொலைகளை இந்தியா தடுக்க வேண்டும்..” ஈரானின் உச்ச தலைவர் கருத்து..

இந்து தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் விமர்சித்துள்ளார்.

iran supreme leader

வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி வன்முறை

இந்த வன்முறைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஈரானின் உச்ச அதிகாரம் கொண்ட தலைவர் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுதை பார்த்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் துக்கத்தில் உள்ளன. இஸ்லாமிய உலகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க, இந்து தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைவரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள இம்ரான் கான், “இந்தியாவில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் முஸ்லிம்கள் படுகொலை விவகாரத்தில் மோதியின் இனவெறி இந்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக ஈரானின் உயரிய தலைவர் காமேனி மற்றும் துருக்கி அதிபர் எர்துவான் ஆகியோருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்..!

Fri Mar 6 , 2020
சுற்றுச்சூழல் மற்றும் புகையில்லா சமுதாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, புதுமணத் தம்பதியினர் மாட்டுவண்டியில் 10 கி.மீ பயணம் மேற்கொண்டனர். கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷினி (23). கோவை மாவட்டம் மேட்டு்ப்பாளையத்தைச் சேர்ந்தவர் பரணி பிரகாஷ் (25). இவர்கள் இருவருக்கும் நேற்று காலை, கோபி அருகே உள்ள கருங்கரடு முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர், கூகலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனைவரும் […]
New Project 9

You May Like