கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

கேரளாவில் கொரானாவால் அரசு மருத்துவமனை மூடப்பட்டுகிறதா?..


கேரளாவில் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை ஏற்படாவிட்டாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கேரளா அரசு நாட்டின் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வந்தாலும், அதற்கான முழுமையான பலன் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. அங்கு இதுவரை 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும், சில முக்கியத் துறைகளின் மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கொரோனா தொற்று இருப்பதால், அவர்களிடம் இருந்து நோயாளிகளுக்கும் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மருத்துவ நிறுவனம் இப்போது தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுள் ஒருவர், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டிலிருந்து சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். அவருக்கு நோய்த்தொற்று இருந்தும், அதற்கான எந்த அறிகுறிகளும் அவருக்குத் தென்படாததால் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

Coro660

கடந்த 8-ம் தேதி அவருக்குக் கொரோனா தொற்றின் அறிகுறிகளுள் ஒன்றான தொண்டை வலி ஏற்படவே, தனது பயண வரலாற்றை மருத்துவ மேலதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அடுத்த நாளே இந்தத் தகவல் மாநில சுகாதார அமைச்சகத்துக்குத் தெரியவந்தாலும், எவ்வித அறிவுறுத்தல்களும் இவருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் புற நோயாளிகள் பிரிவில் இவர் பணிபுரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12-ம் தேதி அந்த மருத்துவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். பின், தானாகவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்துக்குத் தகவல் அளிக்க, அடுத்த நாளே அவரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் இவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கேரள சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், இவருடன் நெருங்கிப் பழகிய மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், இவர் கண்காணித்த நோயாளிகள் எனப் பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு நோயாளிகளை கண்காணிக்கச் செல்வதையும் தவிர்த்துள்ளார். இதனால், மருத்துவமனை மூடப்படும் அளவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, இன்னும் பிற நோயாளிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்ற அச்சம் எழுத்துள்ளது.

1newsnationuser4

Next Post

தர்ணாவில் ஈடுபட்ட திக் விஜய் சிங் போலீசாரால் கைது

Wed Mar 18 , 2020
பெங்களூருவில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏககளை சந்திக்க முயன்ற, மூத்த தலைவர் திக்விஜய்சிங்கை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் கட்சியில் இருந்து விலகினர். இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 6 பேர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் […]
digvijay 1584497241

You May Like