அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இந்தியர்கள் கொரானாவை எதிர்கொள்ளும் முறை சரியா?..

இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்க,  அதன் உண்மை முகத்தை அறியாமல் தீபம் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது என்பது சரியா?..

modi


கொரானா வைரஸ் எனும் ஒற்றை வார்த்தை தான், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரை வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.

உலக அளவில் 12 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 70 ஆயிரத்தை கடந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை. ஐரோப்பிய நாடான இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை இதன் பாதிப்பில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்க, வல்லரசு நாடென மார்தட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவும் இதற்கு தீர்வு காண முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தற்போது இரண்டாவது நிலையில் நீடித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடக்க, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 கடந்துள்ளது.

merlin 168078303 f8d80d84 fa08 44ec ab43 eadc5844e38a superJumbo 1

நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக நாடுகள் இதற்கான மருந்தை கண்டுபிடிக்க இரவு பகலாக போராடி வருகிறது. சீனா எதிர்முனையில், கொரானா வைரஸ் செல்லுக்குள் நுழைவதையே தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.

ஆனால், இந்தியா அதற்கு நேர் எதிராக பயணித்துக் கொண்டுள்ளது என்பதே உண்மை. மக்களிடம் நெருக்கத்தை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தியது என்பது பாராட்டுக்கரிய செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்காக அரசாங்கம் எடுத்த முன்னெச்சரிக்கைகள் என்ன என சிந்திக்கும் போது பதில் இல்லை. 130 கோடி மக்களை ஒரு இரவில் ஒரு உத்தரவு மூலம் வீட்டில் அடைப்பது என்பது சாதாரணமானது அல்ல.

நோய்த்தொற்று அடுத்த கட்டத்தை எட்டிவிட்டால், அதை சமாளிக்கும் மருத்துவ வசதி நம்மிடம் உள்ளதா என்பது கூட கேள்விக்குறியே..

மனித உயிர்கள் நம்முன் காற்றில் கரைந்து கொண்டுள்ளன. பொருளாதாரம் சரிந்து கொண்டுள்ளது. இதற்கான தீர்வாக அரசு இதுவரை எந்த தீர்வையும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை.

ஆனால், அதற்கு மாறாக மின்விளக்கை அனைத்து தீபம் ஏற்றுங்கள் என வலியுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பை மக்களும் ஏதோ தீபாவளி பண்டிகை என்பதை போல நினைத்து, தீபங்களை ஏற்றியும், பட்டாசுகள், வான வேடிக்கைகள் கொண்டும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

images 40

ஆனால், இதே சமயத்தில் கடந்த இரண்டு நாட்களாக நோயின் வேகம் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்த்தில் இந்தியாவில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவேளை, மக்கள் நெருக்கமாக வாழும் நம் நாட்டில் கொரானா மூன்றாம் கட்டமான, சமூக தொற்றை அடைந்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி சிந்தித்து இருந்தால் பொறுப்பின்றி இப்படி செயல்பட்டு இருக்க மாட்டோம்..

இந்த நிலையை சிறிதும் உணராமல் பட்டாசுகளை வெடித்தும், தீபங்களை ஏற்றியும் உற்சாகமாய் கொண்டாடுகின்றனர் எனில் இந்திய மக்கள் இந்த கொரானாவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தான் உலக நாடுகளும் கருதும்.

கண்முன்னே நம் இந்தியர்களின் உயிர் போய்க்கொண்டிருக்கும் போது எதற்காக இந்த கொண்டாட்டம். அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக நேற்று இரவு மட்டும், ஜெய்பூரில் வைஷாலி நகர், மகாராஷ்டிரா விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதி, பாட்னாவில் ராமக்ரிஷ்ணாவி நகர், சென்னையில் எண்ணுர் என பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

fire in chennai

நமது இயலாமையை மறைக்க கடவுள் மீது பாரத்தை போடுவது என்பது முட்டாள்களின் செயல்.

இந்தியாவை காட்டிலும் சிறிய நாடுகள் எல்லாம் அறிவியல் சார்ந்த முடிவுகளை நோக்கி செல்லும்போது, நாம் மட்டும் நம்பிக்கை எனும் ஒளியை ஏற்றி வைப்பதன் மூலம் நோயை ஒழிப்பதில் ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவு வரும் என நம்புவது முட்டாள் தனம் ஆகவே கருதப்படும்.

நிலை அறிந்து செயல்படுவதே நாம் கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் அடையாளம், அதை விடுத்து கண்முடித்தனமாய் ஆள்பவர் சொல்கிறார் என்பதற்காக, அந்த செயலால் கிடைக்கும் பயன் என்ன, ஏதேனும் ஒரு நல்ல தீர்வு உண்டா என்பதை சிறிதும் சிந்திக்காமல் செயல்படுவது முட்டாள் தனம் அல்லவா??..

கொரானாவை ஒழிக்க அறிவியல் எனும் விளக்கை ஏற்றுவது மட்டுமே சிறந்த தீர்வு என்பதை உணர்வோம்..கைதட்டலாம், விளக்கு ஏற்றலாம் வெற்றி நமதானதும்..

1newsnationuser4

Next Post

‘சீன வைரஸே திரும்பி போ’ : கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக எம்.எல்.ஏ..!!

Mon Apr 6 , 2020
‘கொரோனாவே போ, போ’ என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஏற்கனவே முழக்கமிட்ட நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ‘சீன வைரஸே திரும்பி போ’ என்று கூறியுள்ளார். கொரானா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் […]
bjp mla raja singh

You May Like