தமிழ் ராக்கர்ஸில் மாஸ்டர் படம் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, தீனா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தர்டு லுக் போஸ்டர் ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதேபோல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அமல்படுத்தப்பட்ட கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. எனினும் ஒரு சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொட்க்ஷன்ஸ் பணிகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கின.

இந்நிலையில் மாஸ்டர் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே எப்படி படத்தை வெளியிட முடியும் என்ற கேள்விகள் எழுந்த போது தமிழ் ராக்கர்ஸில் மாஸ்டர் படம் உள்ளது உண்மை தான் என்பது தெரியவந்தது, ஆனால் அது 2016-ம் ஆண்டு கொரிய மொழியில் வெளியான மாஸ்டர் படமாகும். இதனையடுத்து வதந்தினாலும், ஒரு லாஜிக் வேண்டாமா என்று சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.
