ஜாக்கிரதை.. அசைவ உணவுகளால் உடலில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமாம்..

பண்டைய இந்திய மருத்துவ முறையாக கருதப்படும் ஆயுர்வேதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அசைவ உணவை உட்கொள்வதால் உடல் மற்றும் மன சமநிலையின்மை ஏற்படுவதாக கூறுகிறது.. மேலும் அசைவ உணவுகளால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிகிறது..

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலரும் அறியாத தகவல் இதோ..!

நச்சு அதிகரிக்கும்: அசைவ உணவுகள், குறிப்பாக இறைச்சியில், அதிக அளவு நச்சுகள் உள்ளது.. இந்த நச்சுகள் உடலில் குவிந்து, செரிமான பிரச்சனைகள், தோல் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.. மேலும் உடலின் நோயெதிப்பு அமைப்பு பலவீனமாக மாறும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.. மேலும் அசைவ உணவை உட்கொள்வது பித்தத்தின் அளவை அதிகரிக்கலாம், இது கோபம், எரிச்சல் மற்றும் தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

செரிமானம் பிரச்சனை : அசைவ உணவு செரிமானமாக அதிக நேரம் எடுக்கும்.. என்பதால் செரிமான மண்டலத்தில் நச்சுகள் குவிந்துவிடும். இதனால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம்: அசைவ உணவை உட்கொள்வது ஒரு நபரின் மனநிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கவலை, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.

Nurse who ate chicken died without treatment..!! 20 people have vomiting, fainting..!! what happened..?

நாள்பட்ட நோய்கள் அதிகரிக்கும் அபாயம்: அசைவ உணவில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் நிறைந்த சைவ உணவு, உடல் மற்றும் மனதில் நல்ல ஆரோக்கியத்தையும் சமநிலையையும் பராமரிக்க சிறந்த வழி என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.. நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் மற்றும் மன நலனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஒருவரின் உடலைக் கேட்பது மற்றும் செய்யப்படும் உணவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துவது முக்கியம்.

Maha

Next Post

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி எப்போது முடியும்…..? சுகாதாரத்துறை அமைச்சர் சொன்ன பதில்….!

Sun Feb 12 , 2023
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கலை கடந்த 2019 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக நாட்டப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக ஆட்சிக்கு […]

You May Like