தமிழ்நாட்டில் இப்படி ஒரு அதிசய கிராமமா? 450 ஆண்டுகளாக மது, புகை பிடிப்பதற்கு தடை!

மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.

3,000 குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில், 450 ஆண்டுளுக்கு மேலாக மது மற்றும் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும், கடவுள் மீது உள்ள பக்தி மற்றும் மரியாதைக்காகவும், பழங்கால மரபுகளை மதிக்கும் வகையிலும் இங்கு மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் கூறுகினர். மேலும், இந்த கிராமத்தில் கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், காலணிகள் அணிவதை தவிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அசத்தல்...! இளைஞர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை...! வரும் 28-ம்‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Tue Feb 7 , 2023
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்‌ ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]

You May Like