தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் பா.ஜ.க பிரதிநிதியா???

6 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காணொளியில் சிறுநீர் கழிக்கும் நபர் பிரவேஷ் சுக்லா எனவும், அவர் அப்பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது.


இந்த கொடூரமான சம்பவம் நடந்த வீடியோவானது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், அதுகுறித்து அவர் நேற்று ட்விட்டரில் பதிவிட்டார். அதில், “சித்தி மாவட்டத்தின் ஒரு வைரல் வீடியோ எனது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் உள்ள குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) கீழ் நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டார்.

பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்படும் பிரவேஷ் சுக்லா, பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாஜக எம்எல்ஏ கேதார் சுக்லாவுடன், குற்றச்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பிரவேஷ் சுக்லாவே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிரவேஷ் சுக்லாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் அகர்வால் கூறுகையில், “பிரவேஷ் சுக்லாவுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த தொடர்பும் இல்லை. பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு கொடூரமான செயலையும், கட்சி எப்போதும் எதிர்க்கும். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டார்.

இதுகுறித்து பிரவேஷ் சுக்லா பேசுகையில், “சித்தி நகரில் இதுபோன்ற போஸ்டர்கள் இல்லை. சமூக வலைதளங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் பெயரை தவறாக பயன்படுத்தியற்காக அவர் மீது புகார் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மூன்று பிரதிநிதிகள் இருப்பதாகவும், பிரவேஷ் அவர்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் காவல்துறையினர் கவனத்திற்கு இது வந்தததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தி போலீசார், பிரவேஷ் சுக்லாவுக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய கைது குறித்து தெரிவித்திருக்கும் காவல்துறை, “பிரவேஷ் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் மாறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் அவரை கைது செய்துள்ளோம். அதிகாலை 2 மணியளவில் அவர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, சுக்லாவின் மனைவி மற்றும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

RUPA

Next Post

மாமன்னன் அருமையான படைப்பு - பாராட்டிய ரஜினி, நன்றி சொன்ன மாரி செல்வராஜ்

Wed Jul 5 , 2023
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் திரைப்படம். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான நாள்முதலே, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை குவித்துவருகிறது மாமன்னன். வசூல் ரீதியாகவும் படம் வெற்றிருப்பதாக கூறி, இயக்குநர் மாரி செல்வராஜூக்கு கார் பரிசளித்திருந்தது தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட்ஸ். நடிகர் ரஜினிக்காக, நேற்று […]
F0PiLaiaUAA3hUv

You May Like