தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் இந்த அமைச்சரின் மகனா?

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அசோக் சிகாமணி என்பவர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். இதனால் போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தன் பெயலாளராக ஆர்.ஐ.பழனி, பொருளாளராக சீனிவாச ராவ் துணை செயலாளராக பாபா ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் பெருநகரம் மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒரு நபர் ஓட்டு போட முடியும். சம்மந்தப்பட்ட சங்கம் பரிந்துரை செய்யதும் நபரே ஓட்டு போடவும் தேர்தலில் போட்டியிட முடியும்.

மாவட்ட கிளப் பரிந்துரை செய்யாத வாக்காளர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபபதி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் ஓட்டு போடவும், போட்டியிடவும் எஸ். ரமணன் என்பவரை பரிந்துரைச் செய்யப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் சங்கத்தை சேர்ந்தஅசோக் சிகாமணி என்பவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.இது முறையல்ல எனவே ரமணனன் ஓட்டுபோடவும்தேர்தலில் போட்டியிடவும் முடியும் என மனுதாரர் வக்கீல் தரப்பில் வாதிடப்பட்டது.

இது போன்ற பிற மனுதாரர்கள் சார்பிலும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தலை  நடத்த உத்தரவிடப்பட்டது.

Next Post

ஒரே நேரத்தில் பிறந்த 3 குழந்தைகள்!! பிள்ளைகளை வளர்க்க முடியாது என நினைத்து தாய் மாயம்!!

Sat Nov 5 , 2022
மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண்குழந்தைகளை விட்டு விட்டு தாய் மாயமான சோகமான சம்பவம் நடந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 20ம் தேதி பிரசவலியால் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் சில மணி நேரத்திலேயே அவர் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். பிறந்து 3 குழந்தைகளுமே பெண் குழந்தைகள். இதனால் அந்தப் பெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இருப்பினும் […]

You May Like