டெல்டா பகுதிகளில் ஆழ்கடலில் எண்ணெய் கிணறு அமைப்பது பற்றி எனக்குத் தெரியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.

மேலும், டெல்டா கடற்கரையோர ஆழ்கடலில் எண்ணெய்க்கிணறு அமைப்பது குறித்து எனக்குத் தெரியாது என்றும் தெரிந்த பிறகு கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். திருச்சியில் எம்.கே.டி. வாழ்ந்து மறைந்த ஊரில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.