வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரானாவை எதிர்கொள்வதில் குழம்புகிறதா தமிழக அரசு?..

இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அளித்த அனுமதியை தமிழக அரசு சிறிது நேரத்தில் திரும்ப பெற்றுள்ளது. இந்த செயல் அரசு தெளிவற்ற முடிவுகளை எடுக்கிறதோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

TN assembly


கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய & மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானோர் வெளியில் வருவதை தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்ட்டுள்ளன. கொரானா தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதியை ஏற்கனவே தமிழக அரசு கொடுத்திருந்தது. இதனால் அதிகமான தொழிலார்கள் வேலையில்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்தில், தொழிற்சாலைகளை பொருத்தவரை ஸ்டீல், சிமெண்ட், உரம் தொழிற்சாலை, சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலை செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதாக குறிப்பிடபட்டு இருந்தது. மேலும், கரும்பு, பேப்பர், டயர், ஜவுளித்துறை, உருக்கு, கண்ணாடி ஆலை விதிகளுக்கு உட்பட்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

201901130313240087 Edappadi Palanisamy interview SECVPF 1

அரசின் இந்த அனுமதி பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், நோய்த் தாக்குதலின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிப்பது சரியல்ல என எதிர்காட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் எதிர்ப்பையும் கருத்தையும் முன்வைத்தனர்.

வேலை இன்றி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும், தற்போதைய நிலையில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கினால், நோய்த்தொற்று பரவலின் வேகம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிற அச்சம் ஏற்பட்டது.

இதனிடையே, சில மணி நேரங்களிலேயே தொழிற்சாலைகள் இயங்க அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக, தமிழக அரசு அறிவித்தது. இந்த செயல்கள் கொரானாவை எதிர்கொள்ள அரசு சரியான திட்டமின்றி குழம்புகிறதோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றுமா மத்திய அரசின் மனிதாபிமானம்?..

Wed Apr 8 , 2020
கொரானா நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளதோடு, இந்தியர்களுக்கான சிகிச்சையையும் கேள்வி குறியாக்கியுள்ளது. கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மலேரியா நோய்க்கு அளிக்கப்படும், ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில்கொண்டு அதை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்தச் சூழலில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அண்டை நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு […]
தமிழில் அனுப்பிய மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அரசு...தேமுதிக முன்னாள் எம்எல்ஏ கண்டனம்!

You May Like