ஆதார் அட்டையில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா..? ஆன்லைனில் எளிதாக மாற்றலாம்..

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தனித்த அடையாள எண்ணை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு UIDAI ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற தகவல்கள் உள்ளன.

வங்கிக் கணக்குகள், பொது விநியோக முறை (PDS), ஓய்வூதியம், EPF திரும்பப் பெறுதல் போன்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் ஆதார் அட்டையில் பிழை இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.. மாறாக உங்கள் அட்டை விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் முக்கியமான வசதிகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.. எனவே ஆதார் அட்டையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிழையின்றி வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

நீங்கள் ஆன்லைனில் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயரின் எழுத்துப்பிழையை சரிசெய்யலாம்.

ஆன்லைனில் எப்படி எழுத்துப்பிழைகளை சரி செய்வது..?

  • படி 1: https://ssup.uidai.gov.in/ssup/ இல் ஆதார் போர்ட்டலைப் பார்வையிடவும்
  • படி 2: பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி ‘Login’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: ‘Service’ பிரிவின் கீழ் ‘‘Update Aadhaar online’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • படி 4: ‘Edit name’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து சரியான எழுத்துகளை டைப் செய்யவும்.
  • படி 5: submit பட்டனைக் கிளிக் செய்யவும்.

டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும், இது திரும்பப் பெற முடியாதது. சேவைக் கட்டணத்தைச் செலுத்தியவுடன், சேவைக் கோரிக்கை எண்ணைப் பெறுவீர்கள்.

Maha

Next Post

தமிழ்நாட்டை சேர்ந்தவர் புதிய ஆளுநராக நியமனம்..!! வெளியான அறிவிப்பு..!! குவியும் வாழ்த்து..!!

Sun Feb 12 , 2023
ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த […]

You May Like