பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த தாய்….! ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்.,..!

ஏராளமான திருமணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டி கோவில், கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்தியும், மருத்துவமனை நோக்கியும் படை எடுத்து வருகிறார்கள்.ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத குழந்தை பாக்கியம் குழந்தையே தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு தான் முதலில் கிடைத்து விடுகிறது.

குழந்தை தேவையில்லை என்று நினைத்தாலும் குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தையின் மீது பாசம் வந்துவிடும் என்பார்கள். ஆனால் பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்யும் கும்பலும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இது தொடர்பாக தனது கணவர் வழக்கறிஞர் பிரபுவிடம் அவர் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆகவே பிரபுவும் அவருடைய மனைவி சண்முகவல்லியும் குழந்தையை 5 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்பனை செய்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த பெண்ணிடம் குழந்தையை 1 லட்சம் ரூபாய்க்கு விட்டதாக தெரிவித்து தாங்கள் 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததை அறிந்து கொண்ட அந்தப் பெண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அந்த பெண் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தை விற்கப்பட்டதை காவல்துறையினர் அறிந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, குழந்தையை விற்பனை செய்த புகாரில் பிரபு மற்றும் அவருடைய மனைவி சண்முகவள்ளி, ஆகாஷ், புரோக்கர் கவிதா உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அத்துடன் காவல்துறையினர் நடத்திய அடுத்த கட்ட விசாரணையில், தலைநகர் டெல்லியில் இருக்கின்ற குழந்தை கடத்தல் கும்பல் தலைவன் கோபிநாத்தின் மூலமாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவருக்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.

ஆகவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து சிறையில் உள்ள குழந்தையை விற்பனை செய்த சண்முகவள்ளி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது எதிர் தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் இவர்களுக்கு குழந்தை கடத்தை விற்பனை செய்யும் நண்பருடன் தொடர்பு இருக்கிறதா? என்பதை பற்றி விசாரணை செய்ய வேண்டும் இந்த வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது, ஆகவே தற்சமயம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நீதிபதி சண்முகவல்லியன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

திருடிய மகிழ்ச்சியில் குடித்துவிட்டு மெத்தையில் உறங்கிய திருடன்..!! தட்டி எழுப்பிய போலீஸ்..!! வெளுத்து வாங்கிய மக்கள்..!!

Fri Feb 17 , 2023
காரைக்குடி அருகே திருடச் சென்ற வீட்டிற்குள் மது அருந்திவிட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடனை கதவை உடைத்து காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காவல் நிலையம் அருகே வசித்து வருபவர் வெங்கடசன். இவரது சொந்த ஊர் நடுவிக்கோட்டை. இங்குள்ள பூர்வீக வீட்டின் வெளிப்பக்க கேட், திறந்திருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, காரைக்குடியில் இருந்து விரைந்து வந்த வெங்கடேஷ், வீட்டின் கதவை […]

You May Like