திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலா விதிகளை மீறியது உண்மைதான் – விசாரணை அறிக்கையில் தகவல்…!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

vk sasi

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சில சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே ஷாப்பிங் சென்றதாகவும் வீடியோ ஆதாரத்துடன் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார். இந்த புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு நியமித்தது. அந்த குழு தற்போது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் அவருக்கென தனி செல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், அவருக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு வழங்கப்படாமல் தனி சமையல் செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அடுத்து இனி சசிகலா நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை ஆவது சந்தேகம் தான் என பேசப்படுகின்றது.

1newsnationuser2

Next Post

நகைச்சுவை நாயகனுக்கு பிறந்தநாள் இன்று…!

Wed Oct 9 , 2019
வடிவேலு என்னும் ‘இம்சை அரசன்’… நேசமணியை நேசிக்காமல் தமிழகத்தில் ஒருவரும் இருக்க முடியாது. காலை கண்விழுத்தது முதல் இரவு தூங்கும் வரை மீம்ஸ்களாக, பேசும் போது வசனங்களாக, டிவியில் நகைச்சுவை நடிகராக என நம்வீட்டில் ஒரு நபராகவே வாழ்கிறார் வடிவேலு என்னும் இம்சை அரசன். அவரது பிறந்தநாளான இன்று அவரை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இம்சை அரசனின் திரைப்பயணம் : கருப்பு நாகேஷ், சிவாஜி, வைகைப் புயல் […]
vadivelu

You May Like