பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

ஊரடங்கு உத்தரவு எப்படி செயல்படுகிறது..?

பிரதமரின் வேண்டுகோளுக்கினங்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

202003220732300124 Tamil News Janta Curfew Started in India due to Coronavirus SECVPF

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், இந்தியா மீதும் தனது கொடூர கரங்களை நீட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 335க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின்பேரில் தனிமிப்படுத்தப்பட்டு, தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Modi coronavirus speech 696x392 2

இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். சுய ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் பொது மக்கள் தேவைக்காக மருத்துவமனைகள், அம்மா உணவகம், மருந்தகம், ஆவின் பாலகங்கள், பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்குகின்றன. சமுதாய கூடங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாத்துறை, காவல்துறை, ஊடகத்துறையை தவிர்த்து பெரும்பாலானோருக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளும் அரசின் ஒத்துழைப்பிற்கு ஆதரவளித்து, கடைகளை மூடியுள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எதுவும் இன்று இயங்கவில்லை. மாநிலத்தின் பல முக்கிய நகரங்களும், அதன் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

202003220714224962 JantaCurfew commences amid rising COVID19 cases in the SECVPF

தமிழகத்தின் தலைநகரான, சென்னையை பொருத்த வரை பெரும்பாலான இடங்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் காலியாகவே காணப்படுகிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் இன்று பிராத்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் விட்டில் இருந்தப்படி பிராத்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரானாவை ஒழிக்க ஒத்துழையுங்கள் என்ற கோரிக்கைக்கு, தமிழக மக்கள் முழு ஆதரவு அளித்து மக்கள் ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை தள்ளி வைக்க கோரி பிரதமருக்கு கடிதம்...நவீன் பட்நாயக்...

Sun Mar 22 , 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தோய்வு பெற்றதால் இது குறித்து, நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில […]
naveen patnayak

You May Like