ஜெட்லியின் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் கேப்டன் மகன்……

ஜெட்லியின் சீனப்படமான ‘மை பாதர் இஸ் ஏ ஹீரோ’ என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். அவரின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது. இதையடுத்து இப்போது அவர் படை தலைவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதேபோல், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஆர்வமாக வருகிறார். நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவரும் நடிகராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஜெட்லியின் சீன படமான மை பாதர் இஸ் எ ஹீரோ என்ற படம் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம். அதில் நானும் அவரும் இணைந்து நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற இப்போது அந்த படத்தை நான் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன். காலம் எப்படி கைகொடுக்கிறது என்று பார்க்கலாம்” எனக் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

shyamala

Next Post

19 வயது இளைஞன்... 20 நாட்களில் 2 திருமணம்.... உறவினர்கள் அதிர்ச்சி.....

Wed May 15 , 2024
பீகாரில் 19 வயது இளைஞன் 20 நாட்களில் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தந்தி. இவரது மகன் வினோத் குமார். இவருக்கு, நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்திக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பிரீத்தி குமாரியும் வினோத்தைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் […]

You May Like