ரிலையன்ஸ் நிறுவனம் இ-காமர்ஸ் திட்டத்தின் மூலம் சில்லறை வணிகத்தை தொடங்கியுள்ளது. கொரோனா நோய் பரவல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் சில முயற்சிகளால் இந்த வர்த்தகம் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சமூக பரவலை தடுக்க தற்போது மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே பெரிதும் விரும்புகின்றனர். ஏற்கனவே ஸோமடோ, ஸ்விகி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் தற்காலிக ஊழியர்களை பயன்படுத்தி உணவு விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் மளிகை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனமும் கையில் எடுத்துள்ளது. இது கொரோனா விவாகரத்துக்கு முன்பே போடப்பட்ட திட்டம் என ரிலையன்ஸ் நிறுவங்களின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜியோ பிளாட்ஃபார்ம் மூலம் திரைப்பட வெளியீடுகளையும் துவங்கவுள்ளது. திரையரங்குகளில் இனி கூட்ட நெரிசலை விரும்பாத ரசிகர்கள் இது போன்ற ஆன்லைன் திரைப்பட வெளியீடுகளை விரும்புவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமேசான் இந்த திட்டத்தை கையில் எடுத்து சமீபத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் வெளியிடப்பட்டது.

இதே போலவே பேஸ்புக் நிறுவனமும் வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்தி மக்கள் மளிகை பொருட்களை வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய இ-காமர்ஸ் கொரோனா சமூக பரவலை வெகுவாக குறைக்கும் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.