கம்போடியாவில் வேலை… முட்டை கம்பெனியில் ரூ.60000 சம்பளம்… பணத்தை இழக்கும் அப்பாவிகள்…!!

கம்போடியாவில் ரூ.60,000 சம்பளம் என கூறி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பணத்தை இழந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்த அப்பாவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்அளித்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை என்று கூறி தாய்லாந்து, மியான்மர் என கூட்டிச் செல்வது அதிகரித்து வருகின்றது. பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இங்கிருந்து முகவர்கள் மூலம் செல்பவர்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை என கூறி ஏமாற்றி அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்கள் 11 பேர். இவர்களிடம் தலா 2.5.லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முகவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கம்போடியாவுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் வேலையில் சேர்ந்த பின்னர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்த வற்புறுத்தப்படுகின்றது. இதற்கு மறுப்பு தெரிவித்து உறவினர்களிடம் மீண்டும் பணம் அனுப்ப சொல்லி இதியா திரும்பி உள்ளனர். இது குறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாலசுப்பிரமணியம் என்ற முகவர் இவர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டு தங்களை கம்போடியாவில் வேலைக்கு அனுப்பி அங்கு சென்றதும் சட்விரோத தொழிலில் ஈடுபடுத்தச் செய்வதாகதெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் மற்றும் சிலர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சம் வரை சம்பளம் தருவதாக கூறிவிட்டு ஏமாற்றப்படுவதாக தெரிவித்தனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த அவர்கள் நேரடியாக எங்கும் செல்லமால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அவரகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த நபர் குவைத்தில் வேலைக்கு சென்றிருந்தார். ஆந்திராவில் முகவர்கள் மூலம் சென்ற அவர் அங்கு ஒட்டகத்தை பராமரிக்கும் வேலையை கொடுத்துள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதோடு சுட்டுக் கொலை செய்து 4 நாட்களாக விஷயத்தை கசிய விடாமல் வைத்திருந்துள்ளனர். திருப்பூரில் இருந்து மனைவி போன் செய்து கூட எடுக்காத நிலையில் ஒரு வழியாக அவரது நண்பர் அழைப்பு விடுத்து தகவல் தெரிவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது போல பலர் வெளிநாட்டில் சென்று ஏமாற்றமடைந்து குடும்பத்தை விட்டு செல்கின்றனர். இது போல ஏமாற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!!

Thu Nov 3 , 2022
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தயாளு அம்மாள் இல்லத்தில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவர் வீட்டில் இருந்தாலும் செவிலியர்கள் கண்காணிப்பில் அடிக்கடி மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் அவருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]

You May Like