டிகிரி படித்தவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ₹ 18,536 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கு காலியாக உள்ள சமுதாயப் பணிக்கான காலி இடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.02.2023 தேதிக்குள் திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மிசன் வாட்சால்யா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு சமூகம் பணியாளர் பணிக்கான காலி இடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சமூகவியல், சமூக அறிவியல் மற்றும் சமூகப் பணி ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் முடித்து இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ₹ 18,536 ரூபாய் மாத ஊதியம் ஆக வழங்கப்படும் .

இப்பணியில் சேர விரும்புவோர் 18 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படிக்கு என சிறப்பு தீர்வுகள் எதுவும் இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் நபர் கடலூரில் பணிக்கு அமர்த்தப்படுவார். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஆசிர்வாதம், பிளாட் எண்.4, 2வது குறுக்குத் தெரு (தளம்), எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியர் தலைமையகம் (அஞ்சல்) திண்டுக்கல் – 624 004. என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய விபரங்களை அறிய dindugul.ic.in என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.

Baskar

Next Post

இந்து பெண்கள் தங்கள் கூடவே கத்தியை வைத்திருக்க வேண்டும்...! VHP பெண் நிர்வாகி சர்ச்சை கருத்து...!

Thu Feb 16 , 2023
இந்து பெண்கள் அனைவரும் தங்களது பர்ஸில் கத்தியை வைத்து இருக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அனைவராலும் அறியப்பட்ட, வலதுசாரி அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி, இவர் இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் உதட்டுச்சாயத்தை வைத்திருக்க கூடாது, ஆனால் தங்கள் பையில் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று கூறி […]

You May Like