கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி! #Factcheck : கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…!

அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது போன்று, இந்தியாவிலும் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் தனது முட்டிக்காலால் ஒருவரின் கழுத்தை நெறிக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று முகேஷ் குமார் பிரஜாபட் என்பவர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அவரை இரண்டு போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பிறகு கீழே விழுந்து கிடக்கும் அந்த நபரின் கழுத்தை போலீசார் தனது முட்டிக்காலால் நெறித்து அவரை சரமாரியாக தாக்குகிறார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனினும் இந்த விவகாரத்தில் முதலில் முகேஷ் குமார் தான் முதலில் காவலர்களை அறைந்ததாகவும், தொடர்ந்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் பிரதாப் நகர் காவல் நிலையத்தில், முகேஷ் குமாருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை போலீசார் ஒருவர் கழுத்தை நெறித்ததில் அவர் உயிரிழந்தார். ஜார்ஜின் இறப்புக்கு நீதி வேண்டி அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று..

Fri Jun 5 , 2020
ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 5 நாட்களாகவே […]
இந்தியாவில்

You May Like