தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது பள்ளிகள்…..! 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவு…..!

தமிழகத்தில் எதிர்வரும் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதை தொடர்ந்து, பொதுமக்களின் வசதிக்காக 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


அதன்படி வெள்ளிக்கிழமை முதல் வரும் ஞாயிறு வரையில் 3 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 6500 பேருந்துகள் இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதோடு மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு கூடுதலான பேருந்துகளை இயக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதனை முன்னிட்டு, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவ,மாணவிகள் மறுபடியும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பும் விதத்தில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

Next Post

இனி அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சீட் பெல்ட் கட்டாயம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Sat Jun 10 , 2023
கேரள மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணியும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், “கேரளா சாலைப் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே மக்கள் விதிகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் வழியே விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. அடுத்தக்கட்டமாக கேபின் வசதி உள்ள பேருந்து […]
Kerala Bus

You May Like