கடைசி விவசாயி படத்தில் நடித்த பாட்டி கொலை.! மது குடிக்க பணம் தராததால்.. ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.!

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த பாட்டி தனது மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. இந்தத் திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். கடைசி விவசாயி திரைப்படத்தில் மதுரை ஆனையூரைச் சேர்ந்த காசம்மாள் என்ற மூதாட்டி விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசம்மாள் பாட்டி தனது சொந்த மகனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவரது மகன் பணம் கேட்டு கொடுக்காததால் தனது தாயைக் கட்டையால் தாக்கியிருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக காசம்மாள் பலியானார். இதனைத் தொடர்ந்த அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Next Post

பாராளுமன்றத் தேர்தல் 2024: பெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் அமைச்சரின் மகன்.? திமுக நிர்வாகிகள் வலியுறுத்தல் .!

Sun Feb 4 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அனைத்து கட்சிகளும் முன்புறமாக தேர்தல் வேளையில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. திமுகவின் சார்பில் தேர்தல் […]

You May Like