தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு..

இந்தியன் 2 விபத்து தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

kamal new 1

ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள இவிபி பிலிம் ஸிட்டியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கடந்த மாதம் 19-ம் தேதி, திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் உதவியாளர் மது, ப்ரொட்க்‌ஷன் உதவியாளர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இந்த விபத்து தொடர்பாக நஸ்ரத்பேட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சூழலில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கடந்த மாதம் ஷங்கர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், 3-ம் தேதி கமல்ஹாசன் ஆஜரானார். சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியகுற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான கமல்ஹாசனிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

indian 2 accident

மேலும் இந்த விபத்தின் போது அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள், செட் அமைத்தவர்கள் அனைவருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ஏற்று சுமார் 15 பேர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதனையடுத்து இந்த மனுவை இன்று மதியம் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1newsnationuser1

Next Post

அறிகுறியே இல்லாமல் ஹாலிவுட் நடிகரை தாக்கிய கொரோனா..!

Tue Mar 17 , 2020
அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஐடிரிஸ் எல்பா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் கோரதாண்டவத்தை முடித்துவிட்டு தற்போது, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் முகம் காட்டி வருகிறது. இதை தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. இது தும்மல் இருமல் […]
3000

You May Like