தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

“காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட்

காவல்துறை புகார் ஆணையத்தை அமைக்காத, ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின் போது ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசாரின் கொடூர தாக்குதல் தான் அவர்களின் இறப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இதில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை கைது செய்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளம் சம்பவம் போல், மேலும் நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களில் படி ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை..

Fri Jul 3 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் […]
தமிழகத்தில்

You May Like