சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

“உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்..” இந்தியா – சீனா விவகாரம் குறித்து கமல்ஹாசன் ட்வீட்

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள் என்று நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.


இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகள் இடையே பதற்றம் நீடித்து வந்தது. இதனையடுத்து இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதேசமயம், சீனா தரப்பிலும் 5 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது நேற்று சீன ராணுவம் திடீரென அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதில் கற்கள், கட்டைகள் மட்டும் கம்பிகளை கொண்டு இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 3 இந்திய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்து உள்ளதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

202006161322279468 Tamil News Army officer and 2 soldiers killed in Ladakhs Galwan Valley SECVPF

சீன ராணுவத்தின் தாக்குதலில், வீரமரணம் அடைந்த 3 இந்திய வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்பவரும் அடங்குவார். இவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். 22 ஆண்டுகளாக பணிபுரியும் இவர், ஹவில்தாராக உள்ளார். இவரது உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

#BREAKINGNEWS: சீனா அத்துமீறி தாக்கியதல் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு - ஏ.என்.ஐ

Tue Jun 16 , 2020
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்திருப்பதாகவும், சீன தரப்பில் 43 பேர் வரை பலி, படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரிப்பகுதி ஆகிய எல்லைப்பகுதிகளில் இந்திய, சீன துருப்புக்கள் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்த நிலையில், அதை தணிக்க இருதரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை அடுத்து அங்கிருந்து சீன […]
லடாக்கில்

You May Like