இளம் விதவைகள் அதிகமானதற்கு கனிமொழிதான் காரணம்!… ஹெச்.ராஜா தாக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழித்துவிடுவோம் என்று எம்.பி.கனிமொழி கூறிவிட்டு இதுவரை நடவடிக்கை எடுக்காததே இளம் விதவைகள் அதிகமானதற்கு காரணம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்க மறுக்கிறது என கூறுவது தவறு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய நிதி பங்கு 32 சதவீதமாக இருந்தது. மாநிலத்தின் நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே தெரிவித்தார். பிரதமராக மோடி வந்த உடனே மத்திய நிதி கமிஷன் பரிந்துரையை ஏற்று, 42 சதவீதமாக மாநிலங்களுக்கான நிதி பங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை சட்டமாக கொண்டு வந்த போது, தி.மு.க., – எம்.பி., சிவா பாராட்டியும் உள்ளார்.

சென்னையில் வெள்ள நீர் வடிகால் அமைப்பதற்கு 4,000 கோடி ரூபாய் செலவாகியது என தெரிவித்தனர். தற்போது அத்துறை அமைச்சர், 42 சதவீதம் மட்டுமே செலவாகி உள்ளதாக தெரிவிக்கிறார். அதில், மீதமுள்ள 58 சதவீத பணத்தை என்ன செய்தனர்? தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அதிக வருவாய் வழங்குகின்றன. இந்த நிதியை மற்ற மாவட்டங்களுக்கு செலவழிக்கக் கூடாது என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கூறினால் என்ன செய்வர்.

தமிழகத்தில் 2014 தேர்தலில், கழகங்களின் கூட்டணி இல்லாமல் 19.5 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் டாஸ்மாக். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மதுவை ஒழித்து விடுவோம் என தி.மு.க., – எம்.பி., கனிமொழி தெரிவித்தார். எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இன்னும் அதிக இளம் விதவைகள் உருவாவதற்கு கனிமொழியும், தி.மு.க., அரசும் தான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

1newsnationuser3

Next Post

”Miss World 2024”!... இம்முறை இந்தியாவில் உலக அழகி போட்டி!… பிப்.18 முதல் மார்ச் 9 வரை!… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Sun Feb 11 , 2024
71வது உலக அழகி போட்டி (Miss World 2024) இந்தியாவில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த மதிப்புமிக்க உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 20 ஆம் தேதி டெல்லியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (ஐடிடிசி) “தி ஓபனிங் செரிமனி”, “இந்தியா வெல்கஸ் தி வேர்ல்ட் காலா” […]

You May Like