"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கபாலி மோகன் தூக்கிட்டு தற்கொலை…நிதி நெருக்கடியா என விசாரணை…

பெங்களூரு, பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து திரைப்பட தயாரிப்பாளர் கபாலி மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kannada director suicide

கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவர் மோகன் வாக்வாடி என்கிற கபாலி மோகன். இவர் தொழில் அதிபராகவும், நிதி நிறுவனமும் நடத்தி வந்துள்ளார். மறைந்த கபாலி மோகன் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்துவட்டி வசூலித்ததாகவும் கூறி சோதனை
நடத்தினர்.

pudhucherry suicide 1

சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதனால் மனவேதனையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் தங்கியிருந்த அறையின் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக ஊழியர்கள் அறைக்குள் எட்டிப்பார்த்த போது மோகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர்கள் கங்கமனகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை.

நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என கருதி கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

டெல்லி மருத்துவர், அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள்..

Thu Mar 26 , 2020
டெல்லியில் மொஹல்லா சமூக மருத்துவமனை மருத்துவர், அவரது மனைவி, மகளுக்கு கொரோன பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூக மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசால் உருவாக்கப்பட்டவை தான் இந்த மொஹல்லா சமூக மருத்துவமனைகள். இந்த மருத்துவமனைகளில் அந்த மக்களுக்காக ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் மோஜ்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த […]
delhi corona

You May Like