ஆஹா… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது.

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளில் இருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாளை மாவட்டம் முழுவதும் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே கவனம்...! அரசு வழங்கும் உதவித்தொகை...! விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…!

Mon Oct 31 , 2022
மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு […]

You May Like