வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம்… ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு…

பிரதமர் கூறும் ஆலோசனைகளின் படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

ediyurappa

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா என்பதை தெரிந்துகொள்ள மாநில மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில்,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனால் வருகிற 14-ந் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மந்ததிரிசபை கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அனைத்து மந்திரிகளும், ஊரடங்கு உத்தரவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறினர்.

ஆனால், பிரதமருடன்11-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளேன். பிரதமர் கூறும் ஆலோசனைப்படி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதாக பெங்களூருவில் 10 ஆயிரம் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக பொறுப்பு மந்திரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும்,
அவர்கள் அந்த மாவட்டங்களிலேயே தங்கி கொரோனா தடுப்பு பணிகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பூக்கள் பாதிப்பு, மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.

அந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், சில பகுதிகளில் மழை பெய்துள்ளதால் விதைகள், உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக்வும், மாநிலத்தில் யாரும் பசியால் வாடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, உணவு தானியங்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.இன்னும் 3, 4 நாட்களில் இந்த பணி நிறைவடையும். அதன் பிறகு மத்திய அரசு வழங்கியுள்ள உணவு தானியங்களும் வழங்கப்படும்.மேலும், மாம்பழம் தற்போது தான் வரத்தொடங்கியுள்ளதால் அவற்றை பெங்களூருவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எடியூரப்பா கூறினார்.

1newsnationuser2

Next Post

ஊரடங்கு நீட்டிப்பது பொறுத்தே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு எடுக்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன்...

Fri Apr 10 , 2020
கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கை பொறுத்தே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கை அமல்படுத்தியதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ஊரடங்கு முடிந்த பிறகு வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக […]
sengottaiyann

You May Like