ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

சமூக விலகலை காற்றில் பறக்கவிட்ட பாஜக அமைச்சர்.. பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டதால் சர்ச்சை..

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்த விதிமுறைகளை மீறி, கர்நாடக பாஜக அமைச்சர் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜக அமைச்சர் ஒருவர் சமூக விலகலை பின்பற்றாமலும், அரசின் விதிமுறைகளை மீறியும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ர்துர்கா மாவட்டத்தில் பரசுராமபுரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் அமைச்சர் பி. ஸ்ரீராம்லு கலந்துகொண்டார்.

அம்மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராம்லுவிற்கு, மலர்களை தூவியும், கோஷங்களை எழுப்பியும், கைகளை தட்டியும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு மிகப்பெரிய ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலையும் பின்பற்றாமல் ஒன்று கூடினர். அவர்களில் பலர் மாஸ்க் கூட அணிந்திருக்கவில்லை. கர்நாடகா அரசு மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான பிறகு, இதுகுறித்து பேசிய அமைச்சர், மக்கள் அனைவரும் எப்போதும், சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ நீங்கள் வீட்டில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். நீங்கள் பிரதமர் மோடி கூறுவதையும், முதல்வர் எடியூரப்பா கூறுவதையும் கேட்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும், கைகளை முறையாக கழுவ வேண்டும்” என்று ஸ்ரீராம்லு தெரிவித்தார்.

sriram lu

இதனிடையே இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத கட்சி தலைவருமான குமாரசாமி விமர்சித்துள்ளார். “ஒரு அமைச்சரே இப்படி செய்தால், பொதுமக்களின் நிலை என்ன..? இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மக்களுக்காக அவர்கள் பணியாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் இதுவரை 3,408 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ஹால் டிக்கெட்டுடன் சேர்த்து முகக்கவசம் - கல்வித்துறை உத்தரவு...

Wed Jun 3 , 2020
பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வந்த சுற்றறிக்கையில் பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கட்டாயம் முகக்கவசம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்ளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொது தேர்வு எந்த குழப்பமும் இன்றி நல்ல முறையில் நடந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பள்ளி வளாகம் அடிகடி கிருமி […]
Whatsapp exam

You May Like