சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

சீயான் 60 : விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர் தானாம்..

நடிகர் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 விக்ரமின்

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி ஆகிய படங்களை இயக்கிய இவர், ரஜினியை வைத்து கடந்த ஆண்டு பேட்ட படத்தை இயக்கினார். பேட்ட படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து ஜகேமே தந்திரம் படத்தை இயக்கி வந்தார். இந்தப் படம் கடந்த மாதம் வெளியாக வேண்டிய நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது.

Jagame Thanthiram 1200 1

இந்நிலையில் நடிகர் விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு விக்ரமை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கதை கூறியதாகவும், கதை பிடித்து போகவே விக்ரம் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.

download 39

கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அஜய் ஞானமுத்து இயக்கி வரும் விக்ரமின் கோப்ரா படத்தின் படிப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. இந்தப் படத்தில், 25 வித்தியாசமான தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

900 மர்ம சிற்பங்கள்... காரணமாக சொல்லப்படும் கதைகள்...

Wed Jun 3 , 2020
உலகில் பல இடங்கள் உள்ளன, அவை சில காரணங்களால் இன்றளவும் மர்மமாக இருக்கின்றன. அத்தகைய ஒரு இடம் தான் சிலி, தென் அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைகள் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையிலான நாடு. உண்மையில், இங்கு ஒரு வெறிச்சோடிய தீவு உள்ளது. அங்கு சுமார் 900 மர்ம சிற்பங்கள் உள்ளன, அவை தயாரிக்கப்பட்ட சிற்பங்கள் என்றாலும், அவை ஏன் உருவாக்கப்பட்டன என்பது ஒரு மர்மமாகவே உள்ளது. இந்த தீவுக்கு ஈஸ்டர் […]
25wordplay easterislandhead articleLarge

You May Like