’உங்க எதிர்பார்ப்பை பெருசா வச்சுக்கோங்க’..!! விஜய்யுடன் மோதும் பிரபலம்..!! சஸ்பென்ஸை உடைத்த ரத்னகுமார்..!!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகி மாபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தின் கதையாசிரியர் ரத்னகுமார் அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில் விஜய்யின் மற்ற படங்களை காட்டிலும் இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கும் என்றும், உங்களது எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டு படம் பார்க்க வாருங்கள் எனவும் தெரிவித்தார்.

இவரது பேட்டி வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு பேட்டி கொடுத்து லியோ படத்தின் முக்கியமான ஹிண்ட் ஒன்றை கொடுத்துள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இப்படத்தை எவ்வளவு சஸ்பென்சாக இயக்க நினைத்தாலும், எப்படியோ வெளியில் பல விஷயங்கள் கசிந்து விடுகிறது. இதை புறக்கணிக்க லோகேஷ் முதல் படத்தில் பணிபுரியும் அனைவரும் சைலண்ட்டாகவே இருக்கின்றனர். ஆனால், ரத்னகுமாரின் இந்த பேட்டி லியோ படத்தின் மொத்த சஸ்பென்ஸையும் உடைத்துள்ளது. பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்ட இடத்தில் ரத்னகுமார், லியோ படத்தில் தரமான சம்பவம் உள்ளது என்றும், கமல்ஹாசனும், விஜய்யும் இணைந்து வரும் காட்சிகள் வேற லெவல் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பேட்டி வைரலாகியுள்ள நிலையில், லியோ படத்தில் விஜய்யுடன் யார் மோத போகிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் பெரும் கேள்வியாகவே இருந்தது. ஆனால், தற்போது அப்படத்தின் கதாசிரியர் இவ்வளவு பெரிய விஷயத்தை கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளார். இது ஒரு புறமிருந்தாலும், கமல்ஹாசனும், விஜய்யும் ஒன்றாக இணையும் காட்சி, திரையரங்கில் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே புல்லரிக்கும் விதமாக உள்ளது.

Chella

Next Post

கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த பிரபல வங்கி..!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

Tue Feb 14 , 2023
ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக மாறியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய போதும், பொதுத்துறை வங்கியான கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதன்படி, கடன் வட்டி விகிதத்தை 15 அடிப்படை […]

You May Like