மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் : அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? புத்தக பிரியர்களுக்கு விருந்து…. 4.60 கோடி புத்தகங்கள் கொண்ட டிஜிட்டல் நூலகம்… முக பொலிவு.. உடல் வலிமை.. வடிச்ச கஞ்சிக்கு இவ்வளவு மவுசா..! கொரோனா பாதித்த மனைவி உயிரிழப்பு… கணவனும் உயிர் விட்ட சோகம்… இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் – ஐநாவில் எதிரொலி "நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்… பைக்கை பறிமுதல் செய்த போலீசார் கண்முன்னே தீக்குளித்த இளைஞர்… டீசல் விலை உயர்வு ஆரம்பம்… பெட்ரோல் மட்டும் ஏன்..? "கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" – அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி… ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர் ரஷ்யா: உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றி மனைவி இருவருடன் கள்ளக்காதல்… கள்ளகாதலனால் கொல்லப்பட்ட மகள்.. கணவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை… திருமணம் ஆகி 4வது நாள் தூக்கில் தொங்கிய புதுப்பெண்…. அறிகுறிகள் இருந்தாலே தனிமைப்படுத்திக் கொள்ளும் மற்ற மாநில முதல்வர்கள்.. ஆனால் தமிழக முதல்வர்..? என்ன நடக்கிறது முதல்வர் அலுவலகத்தில்..?

பெண்குயின் ட்ரெய்லர் : சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தனது மகனை மீட்க போராடும் தாய்..

கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

பெண்குயின் ட்ரெய்லர்

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் பெண்குயின். இப்படம் வரும் 19-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதி தேவ், லிங்கா ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. கதாநாயகியை மையமாக கொண்ட இப்படத்தின் ட்ரெய்லரை 3 முன்னணி நடிகர்கள் வெளியிட்டனர். அதன்படி தமிழில் தனுஷும், தெலுங்கில் நானியும், மலையாளத்தில் மோகன் லாலும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெய்லரை வெளியிட்டனர்.

Subscribe to my YouTube Channel

காட்டிற்குள் தொலைந்து போன மகனை தேடும் தாயின் போராட்டம் பற்றியது என்பது இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தனது மகனை மீட்கும் தாயாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சைக்கோ திரில்லராக உருவாகி உள்ள படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதனிடையே இந்த ட்ரெய்லரை டிவிட்டர் வெளியிட்ட தனுஷ் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ ஒரு தாயின் அசாதாரண பயணம் தொடக்கம். இந்த ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று குறிபிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஓராண்டு தடைவிதித்தது இந்து சமய அறநிலையத்துறை

Thu Jun 11 , 2020
சென்னை : கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இந்தாண்டு முழுவதும் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோானாவினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஒருபுறம் அரசு எடுத்துவந்தாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை உத்தரவு தொடரத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் […]
கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஓராண்டு தடைவிதித்தது இந்து சமய அறநிலையத்துறை

You May Like