கடத்தப்பட்ட குழந்தைக்கு பால் கொடுத்த போலிஸ்.. நீதிமன்றம் அங்கீகாரம்.!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு
சேவயூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ரம்யா பெண் காவலராக பணிபுரிகிறார். இவரிடம் சென்ற 22 ஆம் தேதி ஆஷிகா என்ற பெண், இரண்டு வாரம் கூட முழுமையாகாத தனது பச்சிளங்குழந்தை குழந்தையை காணவில்லை என்று
புகார் கொடுத்திருநதார்.

இந்த நிலையில், குழந்தை காணாமல் போனதில் கணவருக்கும் ,மாமியாருக்கும் பங்கு இருக்கிறது என்றும், அவர்கள் தான் தூக்கிக் கொண்டு தலைமறைவாகி இருப்பதாகவும் ஆஷிகா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணையில் குழந்தை பெங்களூருக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. பின் தொடர்ந்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அப்போது குழந்தை மிகவும் பசியால் வாடி மயக்க நிலையில் இருந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். தாய்ப்பால் குடிக்காததன் காரணமாக ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தாயுள்ளம் நிறைந்த காவலர் ரம்யா அக்குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட பெண் காவலர் ரம்யாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

சென்னை மழை: ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கல்.. தண்டவாளத்தில் அபத்தான பயணம்.!

Thu Nov 3 , 2022
கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வடகிழக்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த வெள்ள பணிகளுக்காக அரசு இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகள் முடங்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருவொற்றியூர் ரெயில்வே சுரங்கப்பாதை எதிர்பாராத வகையில் மழைநீரால் […]
சென்னையில் விடிய விடிய மழை..!! மக்களே இதை கவனிச்சீங்களா..? மாஸ் காட்டிய தமிழ்நாடு அரசு..!!

You May Like