காதலனை கொடூரமாக உறுப்புகள் அழுகை கொன்ற காதலி.. வெளியானது பகீர் காரணம்.!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராஜன் என்பவருடைய மகன் ஷாரோன் ராஜ் (23). குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டில் ரேடியாலஜி பற்றிய படிப்பு படித்து வந்துள்ளார்.

களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியுடன், தினமும் கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது ஷாரோனுக்கு பழக்கம் ஏற்பட்டு சில நாட்களில் காதலமாக மாறியது. கிரீஷ்மாவும் அதே கல்லூரியில் எம்ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரின் காதல், கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெறிய வரவே அவர்களு இது பிடிக்கவில்லை. அதனால், உடனடியாக ராணுவ வீரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். முதலில் கிரீஷ்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கு சம்மதித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில் ராணுவ வீரருக்கும், கிரீஷ்மாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஷாரோன் தனது காதலை முறித்து கொண்டார். இந்த நிலையில்கடந்த 14ம் தேதி ஷாரோன் தனது நண்பரான ரெஜினுடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது கிரீஷ்மா கொடுத்த கஷாயத்தையும், ஜூசையும் குடித்தார்.

பிறகு உடல்நலன் பாதித்த நிலையில் , திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஷாரோனின் தந்தை ஜெயராஜ் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

நேற்று காலை கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, ராணுவ வீரருடன் நிச்சயம் செய்த நிலையில் அவரை மணப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து ஷாரோனுக்கு கொடுத்து கொன்றதாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு பெற்றோரும் உடந்தையாக இருக்கலாமோ என்று சந்தேகிப்பதால், அவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Baskar

Next Post

சிறுவனை கடித்த பாம்பு.. பதிலுக்கு சிறுவன் செய்த காரியத்தால் அதிர்ச்சி.!

Mon Oct 31 , 2022
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பாம்பை திருப்பி இருமுறை கடித்து பாம்பையே துண்டாக்கியுள்ளான். இதில் […]

You May Like