குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..?

வால்பாறை கேரள எல்லையில் சுற்றுப்பயணிகள் நுழைய தடை; கொரோனாவால் கேரள அரசின் அதிரடி உத்தரவு

keral assembly 3

கேரளாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக கேரளாவிலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பதால் மற்றவர்களுக்கு இந்நோய் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கேரள அரசு பிறப்பித்துவருகிறது.

athirapalli 1

அதன்படி இன்று வால்பாறைக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இயற்கை சூழலையும், பருவநிலையையும் அனுபவிப்பதற்காக கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கமான ஒன்று. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பின் காரணமாக வால்பாறை சாலக்குடி சாலையிலுள்ள கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் வாளைச்சால் ஆறு ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களை நேற்று முதல் கேரள அரசு மூடியுள்ளது.

Valparai border 1 1

இதனை தொடர்ந்து தொடர்ந்து இன்று முதல் கேரளாவிலிருந்தும் மற்றும் தமிழகத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலக்குடி சாலையை பயன்படுத்தவும் கேரள வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் கேரள தமிழக எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கேரள தமிழக எல்லையிலுள்ள மழுக்கப்பாறைக்கு உள்ளூர் வாகனங்கள் மட்டுமே செல்ல தற்போது அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் மழுக்கப்பாறை , சோலையார் அணை மற்றும் வால்பாறை பகுதிகளில் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும்
வால்பாறையில் உள்ள காட்டேஜ்கள், ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியும் காணப்படுகிறது

1newsnationuser3

Next Post

கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு.76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது

Thu Mar 12 , 2020
சித்திக் சிகிச்சைக்காக சென்று வந்த அனைத்து வழித்தடங்களிலும் மருத்துவமனைகளிலும் துரித பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள தெலுங்கான அரசிற்கு கர்நாடக சுகாதாரத்துறை தகவல்” கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்த 76 வயதான முஹம்மத் ஹுசைன் சித்திக் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி சவுதி […]
corona new 3

You May Like