மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

காதலன் கண்முன்னே காதலியை கற்பழித்த விவகாரம்…கிரண் பேடி அதிரடி…2போலீசார் பணி நீக்கம்…

புதுச்சேரியில் காதலன் கண் முன்னே காதலியை போலீசார் இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவத்தை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால், போலீசார் 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

kiranbedi1

புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக கடந்த புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் புதுச்சேரி வந்தனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அன்றிரவு அம்பலத்தடையார் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரியகடை காவல்நிலைய போலீசார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்று சோதனை என்ற பெயரில், நீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே சொல்லிவிடுவோம், வழக்குபதிவு செய்திவிடுவோம் என மிரட்டி காதல் ஜோடிகளை மிரட்டி, அதில் ஒரு ஜோடியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், மற்றொரு காதல் ஜோடியிடம் பணம் இல்லாததால் காதலன் கண் முன்னே காதலியை இரண்டு போலீசாரும் சேர்ந்து கற்பழித்தாக கூறப்படுகிறது.

kiranbedi 1

இதனால் அந்த பெண் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் தங்களுக்குத்தான் அவமானம் என கருதிய காதலர்கள் இந்த விஷயத்தை வெளியே கூறாமல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் இச்சம்பவம் எப்படியோ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது.

kiranbedi 2

இதனிடையே இந்த விவகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தெரியவர, அவரே நேரடியாக விசாரணையை தொடங்கினார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் பணிபுரிந்துவந்த பெரியகடை காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம், பெரியகடை காவல்நிலையம் தொடர்பாக எனக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இதில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொண்டுதான் வந்துள்ளேன். யாருடைய உத்தரவின்பேரில் போலீசார் தங்கும் விடுதிக்கு சோதனைக்கு சென்றனர்? சோதனையின்போது பெண் போலீசாரை ஏன் அழைத்து செல்லவில்லை. இதில் தவறு நடந்திருந்தால் அது நீதியல்ல. புகார்கள் வந்தால் அதை யார் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்கள்? பீட் ஆபிசர்களின் பணி என்ன? இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றுகடுமையாக சாடினார்.

kiranbedi 2 1

கிரண்பேடியின் கேள்விகளால் அதிர்ந்துபோன காவல்துறை உயரதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரண்டு பேரையும் பணி நீக்கம் செய்துள்ளனர். காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்ததுடன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

பேஸ்புக்கில் மனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்...வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை...

Wed Mar 18 , 2020
திருமணமான அன்றே மனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விவாகரத்து செய்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாதனா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து முதல் இரவன்று சுரேஷின் பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வந்தது. இந்த விடியோவில், தனது மனைவி வேறு ஒரு நபருடன் […]
wife bad affair to get shocked

You May Like