
கேரளா: கேரளமாநிலம்கோழிக்கோடுவிமானநிலைய மேலாளருக்குகொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பினை முதலில் சந்தித்தது கேரளமாநிலம் தான். அப்போது அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு நோய் பரவல் குறைக்கப்பட்டது.இருந்த போதிலும் தற்போது மீண்டும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதுவரை 2323 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தான் இன்று கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவருடன் தொடர்பில் இருந்த சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் விமான நிலைய இயக்குநர் உட்பட 35 பேர்மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.